அரகண்டநல்லூர் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்
Villuppuram King 24x7 |20 Dec 2024 4:27 PM GMT
ஐஜேகே சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேருராட்சி மற்றும் குடமுருட்டி கிராம பகுதிகளில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகுயோரின் ஆலோசனைப்படி இணை பொதுச் செயலாளர்,மாநில மகளிர் அணி தலைவர் லீமாரோஸ் மார்ட்டின் ஏற்பாட்டில், விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவரும், பார்க்க குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளருமான செந்தில்குமார், 400 குடும்பத்தாருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.உடன் இந்த நிகழ்வில் ஐஜேகே மாவட்டத் துணைச் செயலாளர்கள் மனோ, ரமேஷ், நிர்வாகிகள் தருண்குமார், சிதம்பரநாதன்,சந்தோஷ்,சாய்ராம்,குபேந்திரன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசன், ரோட்டரி சங்க செயலாளர் கோத்தம்சந்த், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஏவி.சரவணன்,அக்பர்,ராஜேஷ்,ஏழுமலை மற்றும் ஐஜேகே மாவட்ட,ஒன்றிய நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story