விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தாராளமாக வழங்கிட வேண்டும், நில அளவை செய்து தர பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் குறித்தும், மழை நீரை சேமித்திட தேவையான ஆக்கிரமைப்புகளை அகற்றி குளங்களை சீரமைக்க வேண்டியும், மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கிட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) ராஜா, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நடராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) லீலாவதி உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story