வழிப்பறி ஆசாமி கைது போலீசார் அதிரடி

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வி. கூட்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போத, அவ்வழியே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, சந்தேகமடைந்த போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முருகேசன்,37; என்பதும், கடந்த 9ம் தேதி வி.கூட்ரோடு- விருத்தாசலம் சாலையில் பாத்திர வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம் பணம் மற்றுமு் மொபைல் போனும், 16ம் தேதி வி. கூட்ரோடு மேம்பாலத்தில், போலீஸ் எனக்கூறி, செங்கோட்டையன், 64; என்பவரிடம் ரூ.40 ஆயிரத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, முருகேசனை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

