மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

X
சின்னசேலம் அடுத்த தகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் நீலாவதிமுருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் கோம்பையன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் ராஜசேகர் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
Next Story

