வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நரிக்குறவர்கள் அவதி

X
சிவகங்கை நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்கால், இளையாங்குடி சாலைகள் புறவழிச் சாலையாக மாற்றப்படுகின்றன. இச்சாலைப் பணிக்காக பழமலை நகரில் 9 நரிக்குறவர் குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகளை காலி செய்த அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில், ஒப்பந்ததாரர் தகரக் கொட்டகை அமைத்து கொடுத்தார். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் உள்ளே புகுந்ததால் தவித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

