குமரியில் சன் செட் பாய்ண்ட் செல்ல பேட்டரி வாகனம் அறிமுகம்

குமரியில் சன் செட் பாய்ண்ட் செல்ல பேட்டரி வாகனம் அறிமுகம்
X
கன்னியாகுமரி
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம் வருகிறார்கள். இந்த நிகழ்வுகளை பார்வையிட சன்செட் பாய்ன்ட்  என்ற இடம்  உள்ளது. தற்பொழுது கடற்கரை சாலை வழியாக இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 50 லட்சம் செலவில் 4 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.            இவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் தொடங்க இருக்கிறார். இந்த வாகனங்களை சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மூலம் இயக்க  திட்டமிடப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த பேட்டரி வாகனங்கள் மூலம் சன்செட் பாயிண்ட் சென்று சூரிய அஸ்தமத்தை கண்டு ரசிக்கலாம்.
Next Story