நள்ளிரவில் செல்போன் திருட்டு மூன்று பேர் கைது!

தூத்துக்குடியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மறைத்து வழிப்பறியில் ஈடுபட்டு தனியார் விடுதியில் பதுங்கி இருந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தூத்துக்குடியில் நேற்று இரவு மத்திய பாகம் மற்றும் வடபாகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி மிரட்டி அவர்களிடமிருந்து விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போனை மூன்று பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றுள்ளது இது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறை உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர் இதில் பழைய குற்றவாளிகளின் செல்போன் நம்பரை செல்போன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டதில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது இதை தொடர்ந்து காவல்துறையினர் விடுதிக்கு சென்று விடுதியில் பதுங்கி இருந்த தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த செல்வ பெருமாள் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த மாரிமுத்து முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஜேம்ஸ் சந்தோசம் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர் இதில் செல்வ பெருமாள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story