அனுமதியின்றி சாலை மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி சாலை மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு
X
அரூரில் ஏரிக்கரை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கால்நடைகளுடன் மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் புது காலனியை சேர்ந்த பொதுமக்கள் தனிநபரால் ஏரிக்கரை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, நேற்று அரூர் - திருவண்ணாமலை சாலையில், கால்நடைகளுடன் 3 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அரூர் போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, அரூர் காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் காவலர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது, அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story