பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து காவல் நிலையம் முன்பு இரவில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |21 Dec 2024 11:54 AM ISTகுமாரபாளையத்தில் கோவை பேரணியில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து காவல் நிலையம் முன்பு இரவில் திடீரென பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதாக கூறி, பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு தின பேரணி என கண்டன பேரணி அனுமதி இன்றி நடத்தியது காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா உள்ளிட்ட பலர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் கிஷோர் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், திடீரென இரவில் காவல் நிலையம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலையையும், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வராவையும் விடுதலை செய்ய வலியுறுத்தி காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அண்ணாமலை விடுதலை செய்யப்பட்டதாக தகவல் அளித்த பின்னர் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் விவேக் பாலாஜி சுகுமார் இந்து முன்னணி நிர்வாகி பாலாஜி 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story
