குமரி : மாணவர் உடல் உறுப்புகள் தானம் மாவட்ட நிர்வாகம் அஞ்சலி

X
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். போட்டோகிராபர். இவரது மகன் ஜெயரீஸ் (21) சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அவரது உடல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, இன்று (20-ம் தேதி) காலை மாவட்ட வருவாய் அலுவலர் காளீஸ்வரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது உடல் காலை 10 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
Next Story

