படாளம் தேசிய நெடுஞ்சாலையில் விசிகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்

படாளம் தேசிய நெடுஞ்சாலையில் விசிகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்
X
படாளம் தேசிய நெடுஞ்சாலையில் விசிகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்
படாளம் தேசிய நெடுஞ்சாலையில்விசிகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம். நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய மதிய உள்துறை அமைச்சர் அமிஷாவை கண்டித்து தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், படாளம் கூட்டு சாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் முகிலன் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அப்பகுதிக்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஆனது ஏற்பட்டது.
Next Story