திருப்பத்தூர் சர்க்கரை ஆலையில் எந்திர பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தம்!. விவசாயிகள் வேதனை!.

திருப்பத்தூர் சர்க்கரை ஆலையில் எந்திர பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தம்!. விவசாயிகள் வேதனை!.
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டியில் கரும்பு அரவை தொடங்கிய அடுத்த நாளே ‌சர்க்கரை ஆலையில் எந்திர பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தம்! பல லட்சம் மதிப்பிலான கரும்பு பால் வேஸ்ட் விவசாயிகள் வேதனை!. கரும்பு அரவை மேலாளர் மெத்தனம் சஸ்பெண்ட் செய்ய சொல்லி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செயலாளர் கோரிக்கை!* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி ‌திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ‌19ஆம் தேதி 2024-25-ம் ஆண்டு அரவைப் பருவ துவக்க விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ராஜ் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்து கொண்டு ஆலையின் அரவையை துவங்கி வைத்தனர். இந்த நிலையில் கரும்பு அரவை துவங்கிய நிலையில் சுமார் 1000 டன் கரும்பு மட்டுமே அரவை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நாளில் ‌கரும்பு அரவை எந்திரத்தில் பழுது ஏற்பட்ட காரணத்தினால் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான கரும்பு அரவை பால் உபயோகமின்றி வீணாய் போனது எனவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே கரும்பு அரவைக்கு கொண்டுவரப்பட்ட பல டன் மதிப்பிலான கரும்புகள் லாரியில் நிறுத்தப்பட்டு உள்ளது மேலும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கரும்பின் எடை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் லாரி ஓட்டுனர்கள் கடும் வேதனை தெரிவித்தனர். லாரி ஓட்டுனர் ஒருவர் கூறுகையில் காலை முதல் சாப்பாடு இல்லாமல் இருக்கிறோம், அதிகாரிகள் எந்த ஒரு தகவலையும் அளிக்க மறுக்கின்றனர். இதனால் வெயிலில் கரும்பு எடை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் முல்லை தெரிவிக்கையில் கரும்பு அரவை தொடங்கப்பட்ட அடுத்த நாளிலே அரவை இயந்திரம் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டது இதனை சோதிக்க வேண்டிய கரும்பு அரவை மேலாளர், மெத்தனப்போக்காக செயல்படுகிறார் மேலும் இவர் கரும்பு அரவை மேலாளர், தலைமை பொறியாளர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்க செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.. பேட்டி; முல்லை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பத்தூர்
Next Story