வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாகவாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஸ் சாப்ரா, தலைமையில், அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 முன்னிட்டு, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் முன்னிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஸ் சாப்ரா, தலைமையில், அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் எடுத்துரைத்தார். முன்னதாக, இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக்; கொண்டு, நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்பங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய பார்வையாளர் அவர்கள் இன்று விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்களின் மனுக்களை வீடுகளுக்கே சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
Next Story



