புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்
Thiruporur King 24x7 |21 Dec 2024 11:49 AM GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி, மூவேந்தர் நகரில், புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், 2023 - 24ம் நிதியாண்டில், லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 9.45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.இந்நிதியில், புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டுமான பணி முடிந்து இரு மாதங்களுக்கு மேலாகியும், ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மேலும், கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது. எனவே, கோனேரிகுப்பம் ஊராட்சி, மூவேந்தர் நகரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story