கோவை: குட்டிகளுடன் உலா வந்த யானை !
Coimbatore King 24x7 |21 Dec 2024 11:56 AM GMT
ஊருக்குள் குட்டிகளை அழைத்துக் கொண்டு வரிசையாக வீதியில் நடந்து சென்ற காட்டு யானைகள்.
கோவை, தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள்ளும், விலை நிலங்களிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இன்றி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு குட்டிகளுடன் ஆறு யானை கொண்ட யானைகள் கூட்டம் தடாகம் அருகே சோமையம் பாளையம் குடியிருப்பு பகுதியில் வீதிகளுக்குள் உணவு தேடி வரிசையாக நடந்து சென்று உள்ளது. அதனை அங்கு இருந்த ஒரு குடும்பத்தினர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அந்த செல்போன் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story