குமரி : கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Nagercoil King 24x7 |21 Dec 2024 11:58 AM GMT
களியக்காவிளை
குமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் உள்ள கரைச்சி விளையில் ஸ்ரீ கண்டன் சாஸ்தா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளியில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் அதிகமானவர் தினமும் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். தினம் காலை மாலை 2 நேரம் பூஜை நடக்கிறது. நேற்று மாலை கோவிலில் பூஜை முடிந்ததும் மேல் சாந்தி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று 21ஆம் தேதி காலை மறுபடியும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் நிர்வாகிகள் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் கோயில் உண்டியலில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணிக்கை கொள்ளை போனதாக தெரிகிறது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story