ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. எம்எல்ஏ. மகாராஜன் வழங்கினார்

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.  எம்எல்ஏ. மகாராஜன் வழங்கினார்
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. எம்எல்ஏ. மகாராஜன் வழங்கினார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக கிழக்கு ,மேற்கு ஒன்றிய, பேரூர் மற்றும் சார்பு அணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் திமுக கட்சி சார்பில் பள்ளிக்குத் தேவையான உபகரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். இதில் 1ம் வகுப்பு படிக்கும் 50 குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் சேர், ஆசிரியர்கள் அமர்வதற்காக இரண்டு இரும்பு சேர் மற்றும் பள்ளி அலுவலகத்திற்கு பீரோ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் டி.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டு 114 ஆண்டுகள் ஆனதால் பள்ளிக்கு எம்எல்ஏ மகாராஜன் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சூரி செல்வம்,‌ பேரூர் செயலாளர் சரவணன், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய அமைப்பாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி அர்சுனன், ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி, வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவசங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story