உடல் நலக்குறைவால் தவணை கட்ட முடியாத நபரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தரக்குறைவாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள் மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
Virudhunagar King 24x7 |21 Dec 2024 12:25 PM GMT
உடல் நலக்குறைவால் தவணை கட்ட முடியாத நபரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தரக்குறைவாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள் மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
முடியனூர் பகுதியில் உடல் நலக்குறைவால் தவணை கட்ட முடியாத நபரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தரக்குறைவாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள் மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா முடியனூர் பகுதியைச் சார்ந்தவர் முத்தையா, வயது 42 இவர் தனது இருசக்கர வாகனத்தின் அசல் சான்றிதழ்களை வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தனியார் நிதி நிறுவனமான ஆர்த்தி பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் 20000 கடனாக பெற்றதாக கூறப்படுகிறது அதற்கு மாத தவணையாக ரூபாய் 2564 என ஆறு மாதங்கள் செலுத்தி வந்த நிலையில் கட்டிட வேலை செய்யும் முத்தையா எதிர்பாராத விதமாக பணியின் பொழுது தவறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்த காரணத்தினால் மூன்று மாதம் தவணை செலுத்த முடியாமல் போனதாகவும் இதற்கு நிதி நிறுவனத்தில் பணி புரியும் ராஜலிங்கம் கார்த்திக் அருண்குமார் ஆகிய மூவரும் தொடர்ந்து முத்தையாவை அவதூறாக பேசி தவணையை செலுத்த சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது இதை எடுத்து முத்தையாவின் இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முத்தையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் மல்லாகிணறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story