மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து
Nagapattinam King 24x7 |21 Dec 2024 12:57 PM GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சட்டமேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை கண்டித்து, நாகை மாவட்டம் கீழையூர் கடை தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், ஏ.முருகையன், எஸ்.செல்வராஜ், டி.பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story