ராசிபுரத்தில் சர்வதேச தியான தினம் கொண்டாடப்பட்டது.
Rasipuram King 24x7 |21 Dec 2024 1:12 PM GMT
ராசிபுரத்தில் சர்வதேச தியான தினம் கொண்டாடப்பட்டது
சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு இராசிபுரம் மனவளக்கலை மன்றம் மற்றும் காசி விநாயகர் ஆலய தவ மையத்தின் சார்பாக தியான நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை யோகா மற்றும் ஆன்மீக கல்வி மையத்தின் சார்பாக சர்வதேச தியான தினம் காசி விநாயகர் ஆலய தவ மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தியானம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறினர். இவ்விழாவிற்கு தலைவர் அருள்நிதி கை. கந்தசாமி இராசிபுரம் மனவளக்கலை மன்றம் அவர்கள் தலைமையில் துரியாதீத தவம் நடத்தி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து வாழ்த்துரை ஞானாசிரியர் முதுநிலை பேராசிரியர் எம்.சௌந்தரராஜன் அவர்கள் வழங்கினார்கள். இதில் அனைத்து அறங்காவலர்கள், பொறுப்பாளர்கள், சேலம் மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து நிலை ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சர்வதேச தியான தினத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story