ஜே.கே.கே. நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா
Komarapalayam King 24x7 |21 Dec 2024 1:30 PM GMT
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரியின் தலைவர் செந்தாமரை தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி பங்கேற்று 213 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: உங்களை உருவாக்க பெற்றோர்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் மறக்க கூடாது. பட்டங்கள் வாங்கிய பின் இத்துடன் நம் படிப்பு முடிந்து விட்டது என்று எண்ணவும் கூடாது. நம்மால் ஆன சேவையை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, பல் மருத்துவ கல்லூரி முதல்வர் தனசேகர், துணை முதல்வர் சசிரேகா, பார்மசி கல்லூரி முதல்வர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story