மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
Dharmapuri King 24x7 |21 Dec 2024 1:46 PM GMT
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வேளாண்மை துறை அமைச்சர்
இன்று 21-12-2024 அரசு முறை சுற்று பயணமாக தர்மபுரிக்கு வருகை தந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகளின் தின விழா 2024 முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்று திறனாளிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS தலைமையில் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ மணி முன்னுரை தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P பழனியப்பன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர்க ழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story