நாமக்கல்லில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி!

நாமக்கல் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜன் (இயக்கம் மற்றும் பராமரிப்பு ) தலைமையேற்று விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்.
பொதுமக்களிடையே மின் சிக்கனம், மின்விபத்து,மின் திருட்டு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்சார சிக்கன வார விழா டிசம்பர் 14 முதல் 21-ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இதன்படி,நாமக்கல் -பரமத்தி சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகில் இப் பேரணியை நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி,துணை மேயர் செ.பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இப்பேரணியை,நாமக்கல் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜன் (இயக்கம் மற்றும் பராமரிப்பு ) தலைமையேற்று நடத்தினார். இந்த விழிப்புணர்வு பேரணியில், மின்வாரிய நாமக்கல் கோட்ட அலுவலர்கள், செயற்பொறியாளா், உதவி செயற் பொறியாளா்கள், ஊழியா்கள்,கல்லூரி மாணவ மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
நாமக்கல் துணை மின் நிலையத்தில் ஆரம்பித்த பேரணி பரமத்தி சாலை,பிரதான சாலை, மணிக்கூண்டு, பழைய அரசு மருத்துவமனை வழியாக சென்ற பேரணி, மோகனூர் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது
.இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் கையில் மின்சார விழிப்புணர்வு பாதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர், மேலும் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினர் இப்பேரணியில் பொதுமக்களுக்கு மின்சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்தப் பேரணியில், உதவி செயற் பொறியாளர்கள் ஆனந்தபாபு,பாஸ்கரன்,மனோகரன்,சௌந்திரபாண்டியன்,பிரேம்நாத்,நாகராஜன் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள்,உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story