இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவங்குடி மையக் குழு கூட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவங்குடி மையக் குழு கூட்டம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவங்குடி மையக்குழு கூட்டம் மாவட்ட குழு உறுப்பினர் கோவி. அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சு. பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மைய பொறுப்பாளர்கள் டி கே.மார்க்ஸ், என்.பாரதி மோகன் பி காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் நீடாமங்கலம் தேவங்குடி, பொதக்குடி, வடுவூர் ஆகிய நான்கு மையங்களில் வெகு சிறப்பாக விழா கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தேவங்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அரிச்சபுரம், கீழ தொட்டி ,சித்தாம்பூர் ஆகிய கிளைகளை கொண்ட மைய கூட்டம் நடத்தப்பட்டது.
Next Story