மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை
Chengalpattu King 24x7 |21 Dec 2024 3:25 PM GMT
மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை, பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 48; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி மஹாலட்சுமி என்கிற ஜோஸ்பின்மேரி, 40. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2018 அக்., 12ம் தேதி, குடிபோதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, நடத்தையில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் ஆத்திரமடைந்த அவர், காய்கறி வெட்டும் கத்தியால், மஹாலட்சுமியை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 6,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி, தீர்ப்பளித்தார். அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்திக்கு உடல் பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
Next Story