உழவர் சந்தை அருகே நடந்து சாலையை கடக்கும் முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

உழவர் சந்தை அருகே நடந்து சாலையை கடக்கும் முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
உழவர் சந்தை அருகே நடந்து சாலையை கடக்கும் முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வெஞ்சமாங் கூடலூர், பெரிய கரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் வயது 47. இவர் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 8:30- மணி அளவில், கரூர், உழவர் சந்தை, அம்மா மெஸ் அருகே நடந்து சென்று சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, கரூரை அடுத்த வெள்ளியணை அருகே, மூக்கணாங்குறிச்சியை சேர்ந்த கார்த்தி வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற வேல்முருகன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடது கால் முட்டியில் பலத்த காயமடைந்த வேல்முருகனை மீட்டு, கரூரில் உள்ள ராமன் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்
Next Story