அரகண்டநல்லூரில் தூய்மை பணியாளருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அரகண்டநல்லூரில் தூய்மை பணியாளருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ,தூய்மை பணி மேற்கொண்ட பேரூராட்சியில் பணிபுரியும் 40 தூய்மை பணியாளர்களுக்கு, திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் துணி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை, திருக்கோவிலூர் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசன்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் சௌந்தரராஜன், முத்துக்குமாரசாமி, கல்யாண்குமார்,அக்பர், ஐஜேகே மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்,மாவட்ட மகளிர் அணி தலைவி தேவி பாலமுருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் பொன்முடி,மாவட்ட செயலாளர் ஏழுமலை,மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் மதன்,நிர்வாகிகள் தருண்குமார், தினேஷ்,சாய்ராம் உள்ளிட்ட ரோட்டரி சங்கம் மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story