மின் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிப்பு

மின் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிப்பு
மின் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு கை, கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு நிவாரணம் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், ஒரு கை, கால் அல்லது ஒரு கண்ணை இழப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதேநேரத்தில், மின் விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும். கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற மின் வாரிய இயக்குநர் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story