கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதிச்சீட்டு இன்றி கிரனைட் கல் கடத்திய லாரி பறிமுதல் செய்த கனிமவளத்துறையினர் தொப்பூர் காவல்துறையினர் விசாரணை
தருமபுரி மாவட்ட கனிமவளத்துறையினர் நேற்று டிசம்பர் 21 இரவு தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் பெட்ரோல் பங்க் அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அனுமதி சீட்டு இன்றி 50 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரி ஓட்டுநர் திடீரென தப்பி ஓடிய நிலையில் 7 லட்சம் மதிப்புள்ள லாரியுடன் கிரனைட் கல்லையும் தொப்பூர் காவல் நிலையத்தில் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story