இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்.

இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்.
மதுரையிலிருந்து நேற்றிரவு மலேசியாவுக்கு 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
மதுரை விமான நிலையம் நேற்று முன்தினம் முதல் 24 மணி நேரம் சேவை தொடங்கிய நிலையில் நேற்று (டிச.21) மதுரையிலிருந்து முதல் முறையாக சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்லும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து 8:45 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் மதுரையில் இருந்து 9:05 மணிக்கு சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானம் தாமதம் காரணமாக 8 45 க்கு வரவேண்டிய விமானம் 10:55க்கு வந்து மீண்டும் 11:15க்கு மலேசியா (பினாங்கு) புறப்படடது.
Next Story