ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நால்வர் கைது.
Madurai King 24x7 |22 Dec 2024 1:15 AM GMT
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் இளந்திரையன் தலைமையில் மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி புறக்காவல் நிலையம் அருகில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த TN 05 BK 7113 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 494 சாக்குகளில் 24 ஆயிரத்தி 700 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் லாரியுடன் வந்த காரை சோதனை செய்ததில் ரூ 4 இலட்சம் பணம் இருப்பதும் தெரியவந்துள்ளது. கேரளாவிற்கு கடத்த முயன்றதாக அரிசி உரிமையாளரான மதுரை மேல அனுப்பானடி கதிர்வேல், கன்னியாகுமரி மாவட்டம் புல்லயான்விளை முருகதாஸ், பாறைசாலை பகுதியை சேர்ந்த சிஜி, ஜோஷ்வா, அஷின்ஷா, கேரள மாநிலம் எர்ணாகுளம் டான் வர்கிஸ், மதுரை பேச்சிக்குளம் பாலசுப்ரமணியன், லாரி ஓட்டுனரான பாண்டிச்சேரி மாநிலம் சூரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், லாரி்கிளீனரான லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த அரிசி கடத்தல் வழக்கில் அரிசி உரிமையாளரான முருகதாஸ், பாலசுப்பிரமணியன், லாரி ஓட்டுனர் மணிகண்டன், கிளீனர் குமார் ஆகிய 4பேரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story