பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீக்குளிக்க முயற்சி

அதிமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை தகுதி நீக்கம் செய்ததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில்மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மணியம்பாடி ஊராட்சி.இந்த ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மஞ்சுளா சரவணனும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராசாத்தி வடிவேலும் இருந்து வருகின்றனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் கடந்த நான்கரை ஆண்டு காலமாக ஊராட்சியில் அடிப்படை தேவைகளான மின் கட்டணம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பணம் வழங்க துணைத் தலைவர் கையெழுத்திட்டு வந்துள்ளார். ‌இந்த நிலையில் பதவி காலம் முடிய இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில்,ரூ.30: லட்சம் ஊராட்சியில் பணம் இருப்பு உள்ளது. இதை எடுக்க துணை தலைவர் ராசாத்தியிடம் தலைவர் மஞ்சுளா ஒப்புதல் கேட்டு உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவரை நீக்க மற்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து மஞ்சுளா துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ராசாத்தியை நீக்க புரட்சி மன்ற கூட்டத்தில் தீர்மாணம் போட்டுள்ளார்.இதை அதிகாரிகளிடம் கொடுத்து தகுதி நீக்கம் செய்து விட்டார். இதை அறிந்த ராசாத்தி நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி ராசாத்தியை மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடுகளுக்கு ஒத்து வராத காரணத்தினால் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து தன்னை தகுதி நீக்கும் செய்துள்ளனர். மேலும் அவர் செய்யும முறைகேடுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ஆகியோர் இதற்கு துணைப் போய் உள்ளனர்‌ தன்னிடம் விசாரணை எதுவும் செய்யாமலே விளக்கம் கேட்காமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது. தன்னை தகுதிநீக்கம் செய்துவிட்டு வேறொருவரை நியமித்தது ஊராட்சியில் நிலுவையில் உள்ள ரூ 20 லட்சம் கையாடல் செய்துள்ளனர். ஊராட்சி பதவிக்கால முடிய இன்னும் 15 நாட்களில் இருக்கும் நிலையில் ரூ.20 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதனை கண்டித்தும் முழுமையாக நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்தி நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என தெரிவித்தார்.
Next Story