மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல் நிலைப் போட்டியினை இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் தொடங்கி வைத்தார்
Virudhunagar King 24x7 |22 Dec 2024 1:42 AM GMT
மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல் நிலைப் போட்டியினை இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு, தமிழ்;வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்;கிணைப்பில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலைப் போட்டியினை இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்படி, மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டியானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்கள் அமைப்பதற்கு 9 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகளிலிருந்து 209 அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதில், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த 9 தமிழாசிரியர்களான திருமதி கி.ஜான்சிராணி, திரு.சௌந்தராசன், திருமதி பே.ராஜேஸ்வரி, திருமதி ஆ.ஜெயசித்ரா, திருமதி இரா.ராதிகா, திருமதி பொ.வெள்ளம்மாள், திருமதி கு.உமாராணி, திருமதி நா.கலையரசி, திரு.இரா.இராஜசேகர் ஆகியோர்கள் இன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலைப் போட்டியில் வெற்றி பெற்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்கள் (3X3=9 பேர்) தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள் கலந்து கொள்ளும் இறுதி போட்டியானது விருதுநகரில் 28.12.2024 அன்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் என இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story