வெள்ளகோவில் அருகே பிஏபி வாய்க்காலில் ஆண் பிணம்

X
வெள்ளகோவில் அருகே உப்பு பாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் செல்லும் வழியில் சேமலை கவுண்டன் வலசு பிரிவு அருகே பரப்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் சென்றுள்ள நிலையில் ஒரு மதகில் ஆண் பிணம் கிடந்தது தெரிய வந்தது. பிணமாக கிடந்தவருக்கு வயது சுமார் 40 லிருந்து 50 இருக்கும். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வெள்ளகோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story

