தொடர் விடுமுறை எதிரொலி : விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.
Thoothukudi King 24x7 |22 Dec 2024 3:44 AM GMT
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலியாக தூத்துக்குடி - சென்னை உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலியாக தூத்துக்குடி - சென்னை உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து , தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் முன்பதிவு செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் விவரங்கள் பின்வருமாறு, உள்நாட்டு விமான கட்டணங்கள் சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் – ரூ. 4,796, இன்றைய – கட்டணம் ரூ. 14,281, சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய – கட்டணம் ரூ. 17,695, சென்னை -திருச்சி இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,382; இன்றைய கட்டணம் ரூ.14,387 ஆக அதிகரிப்பு சென்னை – மைசூரு இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.3,432; இன்றைய கட்டணம் ரூ.9,872ஆக அதிகரிப்பு. சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,485; இன்றைய விமான கட்டணம் ரூ.9,418ஆக அதிகரிப்பு. சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ .3,537; இன்றைய கட்டணம் ரூ.8,007ஆக அதிகரிப்பு. சென்னை திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.3,821; இன்றைய கட்டணம் ரூ.13,306ஆக அதிகரிப்பு. சென்னை -கொச்சி இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.3,678; இன்றைய கட்டணம் ரூ.18,377ஆக அதிகரிப்பு. சர்வதேச விமான கட்டணங்கள் சென்னை – சிங்கப்பூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.7,510; இன்றைய கட்டணம் ரூ.16,861 ஆக அதிகரிப்பு. சென்னை – கோலாலம்பூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.11,016; இன்றைய கட்டணம் ரூ.33,903ஆக அதிகரிப்பு. சென்னை – தாய்லாந்து வழக்கமான கட்டணம் – ரூ.8,891, இன்றைய – கட்டணம் ரூ.17,437. சென்னை- துபாய் வழக்கமான கட்டணம் – ரூ.12,871, இன்றைய கட்டணம் – ரூ. 26,752. தொடர் விடுமுறையால் சர்வதேச விமானம், உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம், பல மடங்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Next Story