கன்னியாகுமரி உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

அபராதம்
கன்னியாகுமரியில்  மெயின் ரோடு பகுதியில் உள்ள உணவகங்கள் , தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் அறிவுரையின்படி அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்தி முருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.       ஆய்வின்போது குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப் பட்டிருந்த பழைய இறைச்சி, முந்தைய நாள் சமைக்கப் பட்ட அரிசி சாதம் & நூடுல்ஸ் உட்பட சுமார் 15 கிலோ உணவு பொருட்கள், அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாலித்தீன் பைகள், சாப்பாட்டு தட்டுகள் 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.       மேலும் மனித உணவுக்கு தகுதி இல்லாத செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சுமார் 1 கிலோ எடையுள்ள பொறித்த சிக்கன் மற்றும் அச்சிடப் பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை பஜ்ஜி சமோசா உள்ளிட்ட 8 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.       சுகாதாரமற்ற முறையில் இயங்கும்  உணவகங்கள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து இரண்டு உணவகங்களுக்கு  6000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story