சாமிதோப்பு : அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதியில்  திருக்கல்யாண விழா 

சாமிதோப்பு : அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதியில்  திருக்கல்யாண விழா 
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடை பெறுகிறது. சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார்  விளக்கவுரையாற்றிவருகிறார்.  விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெற்றுவருகிறது.      விழாவில் நேற்று நள்ளிரவு திருக்கல்யாண விழா நடந்தது. இறுதி நாளான இன்று  22-ம் தேதி அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேக விழா நடை பெறுகிறது.  இதனை யொட்டி, காலை சிறப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், மாலை 4 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  சென்னை  உட்பட கேரளா, மும்பை மாநிலங்களில் இருந்தும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
Next Story