விமான நிலைய அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கினர்

விமான நிலைய அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கினர்
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதில் குலதெய்வ வழிபாட்டை இழந்த கோவில் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் ரூ.2லட்சம் நிதியுதவி வழங்கினர்
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதில் குலதெய்வ வழிபாட்டை இழந்த கோவில் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் ரூ.2லட்சம் நிதியுதவி வழங்கினர்.  தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் முடிவைத்தானேந்தல் பகுதியில் மக்கள் வழிபட்டு வந்த குல தெய்வமான செக்கடிமாடன் திருக்கோவில் கோவிலை இழந்தனர். இந்த நிலம் புறம்போக்கு நிலத்துக்கு சொந்தமானது என்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளால் இழப்பீடு வழங்க முடியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் கிராமவாசிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலைய உறுப்பினர்களிடமிருந்து தன்னார்வப் பங்களிப்பாக சுமார் ரூ.2 லட்சம் நிதியுதவியை விமான நிலைய இயக்குநர் எஸ்.ராஜேஷ் ஆர் மற்றும் குழுவினர் கோவில் கமிட்டி உறுப்பினர்களை கவுரவித்து, அவர்களுக்கு தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கர்னல் சுந்தரம், பிரான்சிஸ் வில்லியம், ஜேஜிஎம், காட்வின்-டிஜிஎம்,  பிரிட்டோ-ஏஜிஎம் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய மூத்த அதிகாரிகள் கலந்து காெண்டனர்.
Next Story