குமரி : விடுமுறை நாளான இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்
Nagercoil King 24x7 |22 Dec 2024 5:15 AM GMT
கன்னியாகுமரி
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், கிழக்கே கடல் பகுதியில் இருந்து தோன்றும் சூரிய உதயத்தை காண வார விடுமுறை தினமான, ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிந்துள்ளனர். அதேபோன்று சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களும் ஏராளமானோர் குவிந்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டி உள்ளது. மேலும் சூரிய உதயத்தை தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அய்யப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோன்று சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் கடலில் கால் நனைத்தும், குளித்தும் விடுமுறையை கழித்து வருகின்றனர். கடற்கரையில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story