சேலம் மரவனேரியில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா

சேலம் மரவனேரியில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் பங்கேற்று கேக் வெட்டினார்.
சேலம் மரவனேரியில் உள்ள கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நேற்று இரவு நடந்தது. விழாவில் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம் வரவேற்றார். ஆயர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் குடிலை மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் மந்திரித்து குழந்தை இயேசுவின் சொரூபத்தை அதில் வைத்து ஜெபம் செய்தார். மேலும் கிறிஸ்துமஸ் பெருவிழா கேக் ெவட்டி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மதுரை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் மற்றும் விக்டர் சுந்தர்ராஜ், அல்போன்ஸ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு இயேசு பிறப்பு குறித்து செய்தி வழங்கினார்கள். முன்னதாக இயேசு பிறப்பு குறித்த சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. விழாவில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில் மிகவும் தத்ரூபமாக அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. ஆயர் இல்ல பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவில் ஆயர் இல்ல குருக்கள், பணியாளர்கள், சபை மக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவை பீட்டர் தொகுத்து வழங்கினார். முடிவில் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் நன்றி கூறினார்.
Next Story