சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கம்

X
சேலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடந்த மாதம் நடந்த வாகன சோதனைகள் குறித்து கூறியதாவது:- சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற 49 பேர், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்ற 233 பேர், அதிக பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றிச்சென்ற 142 பேர், கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 213 பேர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய 183 என போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,392 பேர் சிக்கினர். இதையடுத்து அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.61 லட்சத்து 50 ஆயிரத்து 760 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

