காஞ்சிபுரத்தில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Thiruporur King 24x7 |22 Dec 2024 6:05 AM GMT
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வாசலில், நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
காஞ்சிபுரம், மாவட்டத்தில் சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலஅவகாசம் வழங்காமல் ஊழியர்கள் மீது பணிச்சுமை சுமத்துவது மற்றும் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைக்க வேண்டும். நில அளவை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் போராடி வருகின்றனர். தாலுகா அலுவலகங்களில் நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வாசலில், நில அளவை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் மற்றும் நில அளவர்கள் பலர் பங்கேற்றனர். தங்களது கோரிக்கைகள் நிலுவையில் இருப்பது பற்றியும், சங்கத்தின் போராட்டம் பற்றியும் ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் பேசினர். கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
Next Story