பணி நீக்கத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

பணி நீக்கத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தில் பணியாளர்களை நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட் தொழில் பூங்காவில், கார்களுக்கான முகப்பு விளக்கு தயாரிக்கும் ‛வேலியோ லைட்டிங்' என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தில் நிரந்தர தொழிலாளர்கள் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2021 - 2022ம் ஆண்டுகளில், நிர்வாக ஒழுங்கு நடவடிக்கையாக நான்கு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், 10க்கும் மேற்பட்ட தொழிலார்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக, 'நோட்டிஸ்' வழங்கப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்து, சி.ஐ.டி.யு., தொழில் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு., செயலர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சாலையை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அரசு மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினனர். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Next Story