மாவட்டத்தில் இன்று பதிவான மழை நிலவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி அளவில் பதிவு செய்யப்பட்ட மழையின் விவரம்
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பரவலாக கனமழை பொழிந்துள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் டிசம்பர் 22 இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி 10 மிமீ, பாலக்கோடு 14.4 மிமீ, மாரண்டஅள்ளி 6 மிமீ, பென்னாகரம் 2 மிமீ, அரூர் 7 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டி 2.3 மிமீ, நல்லம்பள்ளி 1.2 மிமீ, மொரப்பூர் 05 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 58.4  மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 6.54 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Next Story