மாமல்லபுரத்தில் நாட்டிய விழா இன்று முதல் துவக்கம்
Chengalpattu King 24x7 |22 Dec 2024 6:46 AM GMT
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா இன்று முதல் துவக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் , ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை , அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்லவா் கால சின்னங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் சா்வதேச சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள புராதன சின்னங்களைக் காண ஆண்டு முழுவதும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் வருகை தருகின்றனா். தமிழ்நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வெளிநாட்டு பயணிகள் ஆா்வம் காட்டுகின்றனா். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலாத் துறை டிசம்பா், ஜனவரியில் இந்திய நாட்டிவிழாவை மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஒரு மாதம் நடத்தப்படும் விழாவில் நாள்தோறும் மாலை 6-30 முதல் இரவு 8-30மணி வரை பரத நாட்டியம் குச்சுப்புடி, கதகளி, ஒடிசி , மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு மாநில நாட்டியங்கள், கரகம், காவடி, பொய்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவை முன்னிட்டு கடற்கரை கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்காக திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் சாா்பில் பயணிகளின் வசதிக்காக கடற்கரை கோயில் நுழைவாயிலில் சிற்றுண்டி உணவகமும் அமைக்கப்படுகிறது.
Next Story