பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம்
Thanjavur King 24x7 |22 Dec 2024 7:18 AM GMT
மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில், கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி ஏ.வி.ஆர் தனலட்சுமி ஜூவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் க.குமரன் வரவேற்றார். தனலெட்சுமி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அபிஷேக் ராஜ் பாலாஜி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் நோயாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 368 பேர் புறநோயாளிகளாக கலந்து கொண்டனர். 55 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில், லயன்ஸ் சாசனத் தலைவர் எம்.நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஜி.வி. ராஜ்குமார், தனம் கோ.நீலகண்டன், பி.பன்னீர் செல்வம், சி.க.கோவிந்தன், கமலா கே.ஆர்.வி நீலகண்டன், அரு.வெங்கடேசன், சங்கர் ஜவான், சுப.பெரியசாமி, ரவிச்சந்திரன், ஆர்.கணபதி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் ஆவி.ரவி நன்றி கூறினார். நிகழ்ச்சியை, சபரி குமார் ஒருங்கிணைத்தார்.
Next Story