மரக்கன்றுகளை நட்ட காவல் ஆய்வாளர்

மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு காவல் ஆய்வாளர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு பணிபுரிய வரும் புதிய காவல் துறை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்களை வரவேற்பு செய்து, அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் உள்ள இடங்களில், அல்லது பொதுவான இடங்களில் மர கன்றுகள் நடுவதற்கு தொடர்ந்து சமூக ஆர்வலர் கம்பூர் மருதராஜ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெயந்தி தலைமையில் காவல் நிலையத்தில் நேற்று (டிச.21)மரக்கன்றுகள் நடப்பட்டது.
Next Story