சங்கரன்கோவில் அருகே மாடசாமிகோயிலில் தீ வைப்பு: போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே  மாடசாமிகோயிலில் தீ வைப்பு: போலீசார் விசாரணை
மாடசாமிகோயிலில் தீ வைப்பு: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தி அருள்மிகு மாடசாமி கோவில் அமைந்துள்ளது, இதில் மகா சிவராத்திரி அன்று கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் தினமும் காலை மாலையில் பூசாரி பூஜை செய்வது வழக்கமாக வந்த நிலையில் இன்று அதிகாலையில் கோயிலுக்குள் இருந்தால் சில பொருள்கள் தீயில் எரிவதாக அங்குள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர், இந்த நிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் மர்ம நபர்கள் யாரும் தீ வைத்துள்ளார்களா அல்லது மின் கசிவு ஏற்பட்டு தீ எரிந்ததா என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story