அமித்ஷாவை கண்டித்து

அமித்ஷாவை கண்டித்து
அமித்ஷாவை கண்டித்து மமக, கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் குறித்து அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஈரோட்டில் மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சலீம், பொருளாளர் சகுபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், இந்திய அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மேலும் அவர் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில், ம.ம.க. தலைமை பிரதிநிதி முகமது ரிஸ்வான், தொண்டரணி மாநில செயலாளர் பவானி முகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது லரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கண்டித்து, ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழுஉறுப்பினர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன் கண்டன உரையாற்றினார். இதில், மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story