கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும்அரசு மருத்துவக் கல்லூரி இன்னும் முழுமையாக சுகாதார துறையால் நடத்தப்படவில்லை
Virudhachalam King 24x7 |22 Dec 2024 10:51 AM GMT
முறையாக செயல்பட தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று கடலூரில் மாநில தலைவர் டாக்டர். கே.செந்தில் தலைமையில் பொதுச் செயலாளர் டாக்டர்.ஆ.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு அரசாணை 29 மற்றும் 2 வில் வழங்கப்பட்ட Difficult Assignment Allowance ரூ 3000 பல இடங்களில் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க உரிய ஆணைகளை வெளியிட தமிழக அரசை சங்கம் கேட்டுக்கொள்கிறது. மருத்துவர்கள் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். குறிப்பாக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் MRB மூலம் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். பணி சுமை கூடுதலாக வேலை செய்யும் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். காலியாக உள்ள 300 இடங்கள் நிரப்பப்படுவதுடன் கூடுதல் பணியிடங்கள் முதல் கட்டமாக 500 ஏற்படுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பிற மருத்துவர்கள் பல மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் துன்புறுத்தப்படுகின்றனர். அவை நிறுத்தப்பட வேண்டும். தமிழக அரசு சங்கத்தின் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட படி கூட்டங்கள் வேலை நேரத்திலேயே நடத்தப்பட வேண்டும். கலெக்டர் மாவட்ட அதிகாரிகள் நடத்தும் கூட்டங்கள் சரியான நேரங்களை பின்பற்றி நடக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி ஆக இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி இன்னும் முழுமையாக சுகாதார துறையால் நடத்தப்படவில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு இதனை சரி செய்ய ஆணையிட வேண்டும். காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கட்டணம் அரசு நிர்ணயிப்பதை வசூலிக்க வேண்டும். கல்லூரியின் பெயர் முறையாக மாற்றப்பட்டு மாணிவர்கள் அரசு மருத்துவர்கள் அருகில் உள்ள மாவட்ட பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பயன்பெற வகை செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயற்குழு வில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் டாக்டர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் மருத்துவர் சிவகுமார் செயலாளர் டாக்டர் வெங்கடேசன், வானதி, குலோத்துங்க சோழன், மேற்படிப்பு மாணவர்கள் பிரிவு செயலாளர் புலிகேசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story